Advertisement
மாற்றம் செய்த நாள்
13மே2015
02:45
பதிவு செய்த நாள்
மே 12,2015 23:54
மே 12,2015 23:54
புதுடில்லி: காத்திருப்பு பட்டியலில் இருந்து, கடைசி நிமிடம் வரை,
உறுதியாகாத ரயில் டிக்கெட்டுகளுக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்புதிய திட்டத்தின்படி, பயணிகள், குறைந்த கட்டணத்தில், விமானத்தில் செல்லும் வாய்ப்பை பெறலாம். ஆனால், பயணம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதுவும், காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும். கடைசி நேர பயணிகள் பட்டியல் தயாரிக்கப்படும் வரை டிக்கெட் உறுதியாகாத பயணிகள், இத்திட்டத்தினால் பலனடையலாம். இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் இருந்து இ-மெயில் வரப்பெற்ற பயணிகள், விமான டிக்கெட்டை பதிவு செய்யலாம். இதன் பின், irctc.co.in என்னும் வலைத்தளத்தில், லாகின் செய்து, ரயில் டிக்கெட் பட்டியலில் இருந்து பயணியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், 'பிளைட் சார்ஜ்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விமான வசதி இருந்தால்தான், இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.
பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, விமான டிக்கெட்டிற்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். ரயில் டிக்கெட்டிற்கான கட்டணம், இதில் கழிக்கப்படமாட்டாது. ரயில் டிக்கெட்டிற்கான கட்டணத்தை, வழக்கமான முறையில் திரும்பப் பெறலாம். கடைசி நேர விமான டிக்கெட் முன்பதிவு என்பதால், பயணிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும். இல்லாவிடில், விமான டிக்கெட்டிற்கான கட்டணம் திரும்பக் கிடைக்காது.

Source By : Dhinamalar
No comments:
Post a Comment